தமிழக செய்திகள்

தங்கும் விடுதியில் பெண் மர்ம சாவு

வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மர்ம சாவு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆலமழை நடுத்தெருவைச் சேர்ந்தவர் கவுரி (வயது 58). இவர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தா. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த 40 வயது ஆணுக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவரும் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.கவுரியுடன் தங்கியிருந்த அந்த ஆண் காலை எழுந்து பார்த்தபோது வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்தநிலையில் மர்மமான முறையில் கவுரி பிணமாக கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து விடுதி ஊழியர்கள் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்