தமிழக செய்திகள்

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி...!‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தவர்கள்

கோவை பீளமேடு பகுதியில் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்லாமல் காதலர்கள் ராகேஷ் மற்றும் சுகந்தி ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று காதலன் ராகேஷ் மீது சுகந்தி ஆசிட் வீசி கத்தியால் குத்தியுள்ளார். அது மட்டுமல்லாது தூக்க மாத்திரை சாப்பிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு காதலர்கள் இருவருக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி