தமிழக செய்திகள்

2 பெண்களிடம் தங்கசங்கிலி பறிப்பு

புகழூர் அருகே 2 பெண் களிடம் தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

பூப்புனித நீராட்டிற்கு சென்றனர்

கரூர் காந்திகிராமம் அருகே வெள்ளாளப்பட்டி போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி நாகம்மாள் (47). இந்த தம்பதிக்கு பிரகாஷ் என்ற மகனும், ஹரிதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வேலாயுதம்பாளையம் முல்லை நகரில் உள்ள நாகம்மாளின் அண்ணன் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு நேற்று முன்தினம் குடும்பத்துடன் செல்ல முடிவு செய்தனர். அதன்படி, ரவிச்சந்திரன், நாகம்மாள் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், நாகம்மாளின் மருமகள் பவித்ரா, மகள் ஹரிதா, பேத்தி நேதாஸ்ரீ ஆகிய 3 பேரும் மற்றொரு ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.

2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புகழூர் புனித அந்தோணியார் ஆலயம் அருகே இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள், பவித்ரா அணிந்திருந்த 1 பவுன் தங்கசங்கிலி மற்றும் நாகம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.இதுகுறித்து நாகம்மாள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்