தமிழக செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைவு

ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,534-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து 36 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ. 4,534-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ 70.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 70,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்