தமிழக செய்திகள்

அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக அமைத்த 3 டாக்டர்கள் கொண்ட குழுவில் இருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் செல்வமுருகன் நேற்று கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு வருகிற 16-;ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

டாக்டர் சாட்சியம் அளித்தபோது, ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் எத்தனை காயங்கள் இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நீதிபதி முன்பு கூறினார் என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்