விருதுநகர்
தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விருதுநகர் அருகே மருளூத்துகிராம சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அழகு சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க மாநில நிர்வாகிகள் வெங்கடேசன், விநாயகமூர்த்தி, ஆதிமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் முத்து மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் வேல்முருகன் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனர். உரிய விசாரணைக்கு பின் தகுதியுள்ளவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தாசில்தார் வேல்முருகன் தெரிவித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகி முத்துக்குமார் செய்திருந்தார்.