தமிழக செய்திகள்

அரசு சார்பில் பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு கலெக்டர்ராஜகோபால் சுன்கரா மரியாதை

அரசு சார்பில் பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகம் நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரசின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், உதவி அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவர் உரையாற்றிய சொற்பொழிவுகள் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு