தமிழக செய்திகள்

மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது

வீட்டில் சோகத்துடன் இருந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர்.

மயிலாடுதுறை,

தஞ்சை மாவட்டம் கண்ணாரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மகன் அய்யப்பன் (வயது 35). இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அய்யப்பன் கடந்த மாதம் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவியை தான் பாடம் எடுத்து வந்த தனியார் டியூஷன் சென்டருக்கு அழைத்து சென்று மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் சோகத்துடன் இருந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது மாணவி நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை அழைத்துச்சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஆசிரியர் அய்யப்பனை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை