தமிழக செய்திகள்

நாடு முழுவதும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் - ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சென்னை,ராஜ்பவனில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.

சென்னை,

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்த முடியாததால், இந்த ஆண்டு பிரமாண்டமாக அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வருடம் யோகாவிற்கான தீம் "மனித நேயத்துக்கான யோகா" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8 வது யோகா தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஒவ்வொரு மாநில தலைநகரில் இருக்கும் கவர்னர் மாளிகைகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.அந்தவகையில் சென்னை, ராஜ்பவனில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி