தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே விவசாயிகள் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கோரிக்கை மனுவை அளிக்கலாம்.

வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்