தமிழக செய்திகள்

குட்கா விற்றவர் கைது

திருவள்ளூரில் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் சிறுவானூர், கொசவன்பாளையம், கைவண்டூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருவள்ளூர் அடுத்த பிரயாகுப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 51) என்பவரை கைது விசாரித்து வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை