மதுரை,
கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கவுள்ள சேவல் சண்டைக்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில் சேவல் சண்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வருகிற 25-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அதுவரை தமிழகம் முழுவதும் சேவல் சண்டைக்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.