தமிழக செய்திகள்

"வணக்கம் நான் ஸ்டாலின் பேசுறேன்" - மின்வாரிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நகர்வோர் சேவை மையம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னக சேவை மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொது மக்களிடம் புகார்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது "வணக்கம், நான் ஸ்டாலின் பேசுகிறேன் எந்த விதமான புகாருக்கு அழைத்துள்ளீர்கள்... உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா.. " எனப்பேசி பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்தார். மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு