தமிழக செய்திகள்

திருவாரூர்: போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்....!

நன்னிலம் அருகே கோவில் திருவிழாவின் போது போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே மேனாங்குடியில் சீத்தளாதேவி மாரியம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு இரவு 9 அளவில் இசை நிகழ்ச்சி நடந்து உள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் போதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கிருந்த வாலிபர்கள் பாடலை கேட்டு ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஆட்டம் போட்டு உள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குமரவேல் உட்கார்ந்து பாருங்கள் என்று வாலிபர்களிம் தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரம் பாலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் போலீசார் குமரவேலின் கன்னத்தில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த போலீசார் குமரவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மீட்ட சக போலீசார், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு