தமிழக செய்திகள்

வாயு புயலால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவது தாமதம்

வரும் 25ஆம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில் தான் பருவமழை தீவிரம் அடைய மிகவும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் இந்நேரம் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் பருவமழை தொடங்கி இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டில் தற்போது வரை 10 முதல் 15 விழுக்காடு பகுதிகளில் மட்டுமே பருவமழை தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வாயு புயல் காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றது. இது பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையானது தமிழகத்தில் தீவிரமடைய 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு