தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதோடு, ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து கொண்டிருக்கிறது.

எனவே ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. பல்வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அது குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்