தமிழக செய்திகள்

சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்

சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பு விதிகள் மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை காவல்துறையினர் கடந்த 8 ஆம் தேதி முதல் 3 நாட்களாக பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த 3 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரங்களை சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 3 நாட்களில் சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு