தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடியில் சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணிக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சினிமா டிக்கெட் எடுத்து இருந்தனர்.

ஆனால் அவர்கள் மது குடித்து இருந்ததால், தியேட்டருக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தையும் திருப்பி கொடுத்து வெளியேற்றினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் படம் திரையிடப்பட்டது. படம் ஓடிக் கொண்டிருந்தபோது, அந்த 5 வாலிபர்களும் மீண்டும் தியேட்டருக்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டருக்குள் வீசினர். அந்த பெட்ரோல் குண்டு, தியேட்டர் வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது. பின்னர் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு