தமிழக செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி நீடிக்கிறது.

சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 1924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை