தமிழக செய்திகள்

டிப்பா லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்

டிப்பா லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

தினத்தந்தி

அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை அரசு அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து, அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட கிரஷர், குவாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பெரம்பலூர் மாவட்ட கிரஷர், குவாரியில் வருகிற 23-ந்தேதி முதல் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பெரம்பலூர் மாவட்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்