தமிழக செய்திகள்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம்

நெமிலி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

நெமிலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பணமில்லா பரிவர்த்தனை என்பது நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளாண்மைத் துறையிலும் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

அதேபோல் நெமிலி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்யூ ஆர் ஸ்கேன் கோடு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இனி விவசாயிகள் வேளாண்மை இடுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பணமில்லா பரிவர்த்தனையை நெமிலி வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு