தமிழக செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசனை

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.58 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், முக்கியமாக ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக விரைவில் மாற்றி திறப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலா குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை