தமிழக செய்திகள்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பா.ஜ.க. நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் நேற்று தங்களை இணைத்துக் கொண்டனர்.

தினத்தந்தி

சென்னை,

வடசென்னை மாவட்ட பா.ஜ.க. மீனவரணி செயலாளர் லோகேஷ் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தில் நேற்று இணைந்தனர். அவர்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றார். மேலும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 210 மீனவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், மீனவர்களின் நலனை மக்கள் நீதி மய்யம் காக்கும் என்றும், கட்சியில் மீனவர் அணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் துணைத்தலைவர் மவுரியா, பொதுச்செயலாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்