திருவொற்றியூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி திருவொற்றியூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணியினர் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் எல்லையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.