தமிழக செய்திகள்

"கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸின் கோட்டை" - விஜய் வசந்த்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸின் கோட்டை என்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் விஜய் வசந்த் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அப்பாவின் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாகவும் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டும் எனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைமைக்கு நன்றி.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸின் கோட்டை. சமீபகாலமாக பாஜக மீது மக்களுக்கு அதிருப்தியும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ராகுல் காந்தி வந்துசென்ற பிறகு கன்னியாகுமரியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலே சவாலானதுதான். பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு முறை அப்பாவை எதிர்த்துப் போட்டியிட்டு, ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கும். என்றாலும் நான் வெற்றி பெறுவேன் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை