சென்னை,
சென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநகர் ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
இதனை அடுத்து பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு போகும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் ரெயில் சேவை பாதிப்பினால் அதிக இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.