தமிழக செய்திகள்

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், அஸ்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு கும்பங்கள் யாகசாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு விமான கோபுரங்களில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தான கும்பத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொன்னம்பல நாடார் கலையரங்கம் முன்பு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அன்னதானத்தை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை தலைவர் எம்.செல்வராஜ், செயலாளர் எஸ். ஆர். ஜெயபாலன், பொருளாளர் டி. ஆர். சுரேஷ்குமார், கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கோவில் செயலாளர் மாணிக்கம், நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி பொருளாளர் ரத்தின ராஜா, நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நாடார் தேங்காய்,பழம்,காய்கனி வியாபாரிகள் சார்பில் வெள்ளி சிம்ம வாகனத்தில் பத்திரகாளி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்