தமிழக செய்திகள்

கோயம்பேடு சந்தையில் கணிசமாக குறைந்த காய்கறிகள் விலை... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.!

கோயம்பேடு சந்தையில் கணிசமாக குறைந்த காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், உருளை, ஊட்டி பீட்ரூட் 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெண்டை, உஜாலா கத்திரி 15 ரூபாய்க்கும், வரி கத்திரி 10 ரூபாய்க்கும், பாகற்காய் 20 ரூபாய்க்கும், முருங்கை 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும்,

பட்டாணி 70 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், கர்நாடக பீட்ரூட் 20 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும், பூண்டு 150 ரூபாய்க்கும், அவரை 35 ரூபாய்க்கும், எலுமிச்சை 130 ரூபாய்க்கும், மாங்காய் 180 ரூபாய்க்கும், தேங்காய் 26 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்