தமிழக செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல் கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் அசோக்ராஜ் (வயது 27). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் நேற்று வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமை தாங்கினார்.

இதில் சங்க செயலர் மார்க்ஸ், வக்கீல்கள் சுரேஷ்குமார், ராஜேஷ், ஆறுமுகம், கணேசன், சதீஷ்குமார், சிவசங்கர், ரமேஷ், அர்ஜுன், மணிகண்டன், ஜின்னா, பொன் லிங்கம், தாமஸ், செந்தில், முனீஸ் உள்பட பல வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சாத்தான்குளத்தில் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெகன் ஆண்டனி டென்னிசன் தலைமையில் செயலாளர் பவுன்ராஜ், பொருளாளர் செல்வ மகாராஜா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்