தமிழக செய்திகள்

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளத்தில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்று பேசினார். ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் ஆனந்தவல்லி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்து செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வைத்திலிங்கம், பொருளாளர் ஆரோக்கியசாமி, ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சாந்தகுமார், சேர்மராஜ், சரவணன் விஜய், ராம்குமார், செல்வ தினேஷ், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் நன்றி கூறினார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்