கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,897 பேரும், கோவையில் 2,456 பேரும், செங்கல்பட்டில் 1,430 பேரும், திருப்பூரில் 1,425 பேரும், சேலத்தில் 1,101 பேரும், ஈரோட்டில் 1,070 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 45 ஆயிரத்து 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 98 ஆயிரத்து 130 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 20 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 564 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

இத்தொற்று பாதிப்பில் இருந்து இன்று 25 ஆயிரத்து 056 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 31 லட்சத்து 09 ஆயிரத்து 526 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு