சென்னை,
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்த நிலையில், ரம்ஜான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதைத் தொடர்ந்து இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அன்பைப் பகிர்வோம்! சமூக நல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் நன்னாளாம் இந்த ஈகைப் பெருநாள் புனித ரம்ஜான் திருநாள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்! என் அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய புனித ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.