சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
#MartyrsDay: மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!
அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!
மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.