போடி நகர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது போடி சாலை காளியம்மன் கோவில் அருகே மது விற்ற மீனாட்சிபுரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.