தமிழக செய்திகள்

காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறிப்பு

ஆம்பூர் அருகே காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தனியாக இருந்த காதல் ஜோடியை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்த 2 பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து காதல் ஜோடியினர் 2 பேரும் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்