சென்னை:
கோனா என்ற பெயரில் பேட்டரி காரை சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த எலெக்ட்ரிக் காரை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். பேட்டரி காரில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயணம் செய்தனர்.
இந்த காரின் சிறப்பம்சங்கள் - 9.7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ. பயணிக்க முடியும்.