தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்தார் என்று பேரறிவாளன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்தமைக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பேரறிவாளன், முதல்-அமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. என்னை கட்டியணைத்து முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். நான் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறேன். எனது எதிர்காலம் குறித்து எந்த உதவியையும் கேட்கவில்லை. எனது விடுதலைக்கு குறித்து முதல்-அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். எனது குடும்பத்தின் சூழ்நிலை குறித்து அவர் கேட்டறிந்தார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்என்று அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை