தமிழக செய்திகள்

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை 15-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்லார் ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்தன. ரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில்  ரெயில்வே ஊழியர்கள் சிரமத்தை சந்தித்தனர். மண்சரிவு அகற்ற காலதாமதம் ஏற்பட்டதால் மலை ரெயில் சேவை வரும் 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் உதகை மலை ரெயில் சேவை மேலும் சில தினங்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் வருகிற 15-ந்தேதி வரை  ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை