தமிழக செய்திகள்

ரூ.1½ லட்சம் மோசடி செய்ததால் பெண் தற்கொலை

மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டா. அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மன்னார்குடி,

தூக்கில் பிணம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜீயர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் இறந்து ட்டார். இவருடைய மனைவி சந்திரகலா(வயது 45). இவர்களுடைய மகன் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் சந்திரகலா நேற்று காலை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்திரகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

அப்போது வீட்டில் சந்திரகலா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அந்த கடிதத்தில், சந்திரகலா தனது மகன் கிருஷ்ணமூர்த்தியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்க மன்னார்குடி மற்றும் உள்ளிக்கோட்டையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் கொடுத்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் இதனால் மனமுடைந்து தான்(சந்திரகலா) தற்கொலை செய்து கொள்வதாக சந்திரகலா கூறியிருந்தார். இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை