சேலம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், பகுதி நேர வேலை தொடர்பாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். இதையடுத்து அந்த நபர் கேட்டு கொண்டதை தொடர்ந்து அவரது வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 597-ஜ பல தவணைகளில் அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த நபர் பகுதிநேர வேலை எதுவும் வாங்கி தரவில்லை. அவருக்கு அனுப்பிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். எனவே அந்த பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.