ஓசூர்:-
ஓசூர் போஸ் பஜார் பகுதியில் நேற்று குரங்கு ஒன்று உயிரிழந்து இருப்பதாக விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்து அமைப்பின் நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். உயிரிழந்து கிடந்த குரங்கை ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி குரங்கு உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர். பின்னர் 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி குரங்கு உடலை அடக்கம் செய்தனர். பின்னர் குரங்கிற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.