தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்-வேன் மோதலில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த மேலகொண்டையார் வடுகர் காலனி, செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் நாகராஜ் (வயது 29). இவர் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரம் அருகில் உள்ள பண்ணூர் கிராமத்தில் நடைபெற்ற தனது உறவினர் துக்க நிகழ்ச்சி கலந்து கொண்டார். மீண்டும் அவர் தன் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெருமந்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி எதிரில் வேகமாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நாகராஜூக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்