கயத்தாறு:
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் சுடலைமணி (வயது 30). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்துவரும் ரவி(32) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சுடலைமணி குடிபாதையில் ரவி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ரவியை சுடலைமணி கல் மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமைடந்த ரவி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயத்தாறு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் பால் வழக்கு பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தார்.