தமிழக செய்திகள்

தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி

தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

சிவகாசி, 

சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகள் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டங்கள் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் ஓசெஸ்தேஜோ, கீர்த்திவாசன் ஆகியோர் மோதினர். இதில் ஓசெஸ்தேஜோ வெற்றி பெற்றார். இரட்டையர் பிரிவில் ஓசெஸ்தேஜோ, கிருஷ்ணாதேஜோ ஜோடி முதல் பரிசையும், ஆதித்அமர்நாத், ரூப்சாய் சம்பத் ஜோடி 2-வது பரிசையும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட டென்னிஸ் கழக தலைவர் லவ்லி செல்வக்குமார் செய்திருந்தார். நடுவராக தியாகராஜன் இருந்தார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை