தமிழக செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகேமோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி. அவருடைய மகன் கவுதம் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மகன் சந்தோஷ் (22). இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர். கவுதமும், சந்தோசும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை கவுதம் ஓட்டினார். அவருக்கு பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார். பாறைபுதூர் அருகே சென்றபோது கவுதம் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளும், அந்த வழியாக வந்த மற்றொருவர் வந்த மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

2 பேர் சாவு

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த கவுதமும், சந்தோசும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு