தமிழக செய்திகள்

நெல்லை: நம்பிமலைக்கு சுற்றுலா வந்த மருத்துவ மாணவர் ஆற்றில் மூழ்கி பலி - போலீசார் விசாரணை

திருக்குறுங்குடி நம்பிமலைக்கு சுற்றுலா வந்த மருத்துவ மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏர்வாடி,

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஜோயல்(வயது24). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் மாணவிகள் 6 பேரும், மாணவர்கள் 5 பேரும் இன்று திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் மலைப்பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.

திருமலைநம்பி கோவிலையும் தாண்டி, அங்கிருந்து 2 கி.மீ தூரம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று நம்பியாற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீர் என மாணவர் ஜோயல் நீரில் மூழ்கி பலியானார். அப்பகுதியில் ரோந்து வந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இதனை பார்த்து, உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், திருக்குறுங்குடி போலீசாருக்கும், நாங்குநேரி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினருடன் சென்று உயிரிழந்த மாணவன் ஜோயலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை