தமிழக செய்திகள்

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

தினத்தந்தி

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இங்கு அரசு தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்கு ரூ.29 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து கீழடியில் கட்டப்பட்ட கூடுதல் புதிய பள்ளி கட்டிடத்தை மாணவிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தமிழரசி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்