தமிழக செய்திகள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்

சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

சங்கராபுரம்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ரங்கப்பனூர் ஊராட்சியில் உள்ள மல்லாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, கூடுதல் வட்டார கல்வி அலுவலர் தஸ்பிகா, ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், தலைமை ஆசிரியர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி