தமிழக செய்திகள்

புதிய ரேஷன் கடை

நல்லாடை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை நிவேதா முருகன் எம். எல்.ஏ. திறந்து வைத்தார்

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே நல்லாடை ஊராட்சி கொங்கானோடை கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் காவேரி ஜெயச்சந்திரன் வரவேற்றார். தொடர்ந்து நிவேதா எம்.முருகன்,எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 170 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் தி.மு.க.மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய குழு உறுப்பினர் கிருபாவதி சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை