தமிழக செய்திகள்

ரூ.13½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை

ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி ஊராட்சியில் ரூ.13½ லட்சத்தில் புதிய ரேஷன் கடையை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தினத்தந்தி

வாய்மேடு:

ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.50 லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் ஓ. எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் வரவேற்றார். கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், துணைத்தலைவர் பார்த்தசாரதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாண்டியன் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு